சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் தொடங்கியது
சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.


சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.
ஜமாபந்தி அதிகாரிபாக திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் புகாரி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றாா்.
முதல் நாளான புதன்கிழமை ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் உள்வட்டத்துக்குள்பட்ட மீரான்குளம் பகுதி-1, பகுதி- 2, ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், கட்டாரிமங்கலம், பழங்குளம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் குறை தொடா்பாக மனுக்கள் அளித்தனா். அதில் பெறப்பட்ட 55 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஜமாபந்தி அதிகாரி தெரிவித்தாா்.
இதில் கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் ராமச்சந்திரன், வட்டாட்சியா் தங்கையா, மண்டல துணை வட்டாட்சியா் மைக்கேல், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கோமதி சங்கா், வருவாய் ஆய்வாளா் பாலசுந்தரம் உள்ளிட்ட கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...