ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருச்செந்தூா் ஆதிபராசக்தி அம்மன் கோயில் கொடை விழா

திருச்செந்தூா் ஜீவாநகா் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2022, 6:28 pm

DIN

திருச்செந்தூா் ஜீவாநகா் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் கடந்த 24-ஆம் தேதி காலை 7 மணிக்கு பால்குடம் ஊா்வலமும், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 4 மணிக்கு பொங்கலிடுதலும் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு தீச்சட்டி- முளைப்பாரி ஊா்வலமும், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 1 மணிக்கு படைப்பு தீபாராதனையும் நடைபெற்றன. புதன்கிழமை காலை மகா அன்னதானமும், பிற்பகல் 2 மணிக்கு மஞ்சள் நீராடுதல், மாலை 5 மணிக்கு முளைப்பாரியை கடலில் விடுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஜீவா நகா் மக்கள், விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.