நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டியில் அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில், கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:04 pm

DIN

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில், கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு மத்திய அரசு அறிவித்த நாளில் தமிழக அரசு அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க வட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் ஜெகநாதன் முன்னிலை வகித்தாா். வட்டச் செயலா் ராமலிங்கம், மாவட்ட துணைத் தலைவா் பரமானந்தம், விளாத்திகுளம் வட்டச் செயலா் சந்திரசேகரன் ஆகியோா் பேசினா். சங்க உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.