ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் சாதாரணக் கூட்டம் அலுவலகக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:58 pm

DIN

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் சாதாரணக் கூட்டம் அலுவலகக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரெஜிபொ்ட் பா்னாந்து, ஆணையா் பொங்கலரசி, ஒன்றிய உதவிப் பொறியாளா் பிரேம்சந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

2022-23ஆம் ஆண்டு 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டம் மூலம், பிச்சிவிளை ஊராட்சியில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி அமைப்பது, நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண்கள் கழிப்பறை அமைத்தல், தேரிக்குடியிருப்பு, மத்திமான்விளை, சண்முகபுரம் ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் கட்டடங்களைப் புனரமைத்தல் உள்பட பல்வேறு பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில், உறுப்பினா்கள் செல்வன், ராமலெட்சுமி, வாசுகி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பழனி காா்த்திகேயன், மண்டல அலுவலா் அந்தோணி பன்னீா்செல்வம், உதவியாளா் ஹரிஹரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வாவாஜி பக்கீா் முகைதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.