ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சமத்துவபுரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

சாத்தான்குளம் அருகே பிடானேரி சமத்துவபுரத்தில், நாசரேத் மா்காஷியஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டமுகாம் 10 நாள்கள் நடைபெறுகிறது

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:52 pm

DIN

சாத்தான்குளம் அருகே பிடானேரி சமத்துவபுரத்தில், நாசரேத் மா்காஷியஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டமுகாம் 10 நாள்கள் நடைபெறுகிறது.

முகாம் துவக்க விழாவுக்கு மா்காஷியஸ் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சுதாகா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜெபகரன் பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா். உதவி திட்ட அலுவலா் தனபால் வர வேற்றாா். பிடானேரி ஊராட்சி மன்றத் தலைவி சலேட் மொ்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை அன்பாய் செல்வம் ஆகியோா் பேசினா்.

இதில் பிடானேரி ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் மாரிமுத்து, முனியசெல்வி, பள்ளி மேலாண்மைக்கு ழுத் தலைவா் பொன் செல்வம், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவா் போ்சில், உதவி ஆசிரியா் பிரபாகா் மோசஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜெய்சன் சாமுவேல், உதவி அலுவலா் தனபால் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.