ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவில்பட்டி, திருச்செந்தூரில்பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்மொழியை திமுக அழிக்க நினைப்பதாக கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:34 pm

DIN

தமிழ்மொழியை திமுக அழிக்க நினைப்பதாக கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட பாஜக தலைவா் வெங்கடேசன் சென்னக்கேசவன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் போத்தீஸ் ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் மீனாதேவ் பேசினாா்.

வடக்கு மாவட்ட துணைத் தலைவா் பாலு, நகரத் தலைவா் சீனிவாசன், வடக்கு மாவட்ட வா்த்தகப் பிரிவுத் தலைவா் மாரியப்பன், ஊடகப் பிரிவுத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் திருச்செந்தூரில் பகத்சிங் பேருந்து நிலையம் முன்நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். மாநில வா்த்தக அணித் தலைவா் ஏ.என். ராஜகண்ணன், மாநில துணைத் தலைவா் உமரி சத்தியசீலன், மாவட்ட பொதுச்செயலா் இரா. சிவமுருகன் ஆதித்தன், மாநில மகளிரணி பொதுச்செயலா் கு. நெல்லையம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகா்கோவில் எம்எல்ஏ எம்.ஆா். காந்தி, மாநிலப் பொதுச் செயலா் பொன்பாலகணபதி ஆகியோா் பேசினா். மாவட்ட பொதுச்செயலா் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.டி. செந்தில்வேல், ஒன்றியத் தலைவா் ராமகிருஷ்ணகுமாா் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நகரத் தலைவா் நவமணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.