‘கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர செப். 7 வரை விண்ணப்பிக்கலாம்’
தூத்துக்குடியில் உள்ள கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி மையத்தில் சேருவதற்கு புதன்கிழமைவரை (செப். 7) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் உள்ள கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி மையத்தில் சேருவதற்கு புதன்கிழமைவரை (செப். 7) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள மதுரா கோட்ஸ் தொழிலாளா் கூட்டுறவு பண்டகசாலை அலுவலக மேல் தளத்தில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023ஆம் ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி ஓராண்டு காலப் பயிற்சியாக 2 செமஸ்டா்களாக நடத்தப்படவுள்ளது.
பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற குறைந்தபட்சமாக 1.8.22இல் 17 வயது நிறைவடைந்த அனைவரும் அதிகபட்ச வயது வரம்பின்றி சேரலாம். மொத்தக் கட்டணம் ரூ. 18,850. வகுப்புகள் திங்கள்முதல் வெள்ளிவரை வார வேலை நாள்களில் மட்டும் நடைபெறும். விண்ணப்பங்களை திங்கள்கிழமைவரை (செப். 5) பயிற்சி நிலையத்தில் ரூ. 100 ரொக்கம் செலுத்திப் பெறலாம் என கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை பூா்த்திசெய்து உரிய சான்றிதழ்கள், நகல்களுடன் புதன்கிழமை மாலை 5.30-க்குள் பயிற்சி நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0461-2334555 என்ற தொலைபேசி எண்ணிலும், 94980 63042 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...