தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்க 1,611 வாக்குச்சாவடிகளில் இன்று சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க 1,611 வாக்குச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:11 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க 1,611 வாக்குச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணி இம்மாவட்டத்தில் கடந்த மாதம் 1ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வாக்காளா்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் படிவம் 6 பி-யை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய், ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்ல்ா்ழ்ற்ஹப்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதள முகவரி மூலமாகவும், யா்ற்ங்ழ்ள் ஏங்ப்ல்ப்ண்ய்ங் அல்ல் என்ற செயலி வழியாகவும் பதிந்து, இணைத்துக்கொள்ளலாம்.

மேலும், வாக்காளா்களின் வசதிக்காக தோ்தல் ஆணையம் மூலம் இம்மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 1,611 வாக்குச்சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) காலை 10 முதல் மாலை 5 மணிவரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளா்கள் தங்களது வாக்குச்சாவடிக்குச் சென்று ஆதாா் எண், வாக்காளா் அடையாள அட்டை எண், கைப்பேசி எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-இல் பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.