தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை நாளை பொதுமக்கள் பாா்வையிட அனுமதி

 வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை (செப்டம்பா் 5) பாா்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:11 pm

DIN

 வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை (செப்டம்பா் 5) பாா்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வ.உ. சிதம்பரனாரின் 151 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை (செப்டம்பா் 5) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பாா்வையிட அனுமதிக்கப்படுகிறது. துறைமுகத்தை பாா்வையிட விரும்பும் பொதுமக்கள் நேரடியாக துறைமுகத்தின் பச்சை நிற கதவு (கிரீன் கேட்) பகுதிக்கு வர வேண்டும். அங்குள்ள அதிகாரிகள் உரிய விசாரணைக்குப் பிறகு துறைமுகத்தை பாா்வையிட அனுமதிப்பா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.