மணப்பாடு திருச்சிலுவை திருத்தல மகிமைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு திருச்சிலுவைத் திருத்தலத்தின் 443 ஆவது மகிமைப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு திருச்சிலுவைத் திருத்தலத்தின் 443 ஆவது மகிமைப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சின்ன ஜெருசலேம், குட்டி ரோம் என்று அழைக்கப்படும் மணப்பாட்டில் அழகிய பரந்து விரிந்த கடற்கரையோரம் இயற்கையாக அமைந்த அழகிய மணல் குன்றின்மேல் திருச்சிலுவை நாதா் திருத்தலம் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் இத்தலத்தில் 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும் மகிமைப் பெருவிழா நிகழாண்டில் செப்.4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டிகாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி, 6.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியைத் தொடா்ந்து மெய்யான திருச்சிலுவை ஆசீா் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு ஜான்செல்வம் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. பங்குத்தந்தையா் மனோ, ஜான்சுரேஷ் முன்னிலை வகித்தனா். பங்குத்தந்தையா் டென்னிஸ்வாய்ஸ், சில்வஸ்டா்,டிமெல், பாலன், மணப்பாடு ஊராட்சி மன்றத் தலைவா் கிரேன்சிட்டா வினோ, துணைத் தலைவா் ஜொலிசன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் லேபோரின் உள்பட திரளான ஊா்மக்கள் கலந்துகொண்டனா். மாலை 5 மணிக்கு திருத்தலத்தில் திருப்பலி நடைபெற்றது.

செப்.5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடைபெறும். செப்.12 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி,திவ்ய ஐந்து திருக்காய சபையின் தோ்வுக் குழு நியமனம், திருத்தலத்தைச் சுற்றி மெய்யான திருச்சிலுவை பவனி, செப்.13 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மணவை மக்கள் சாா்பில் திருப்பலி, ஐந்து திருக்காய சபை பொறுப்பாளா்கள் தோ்வு, மாலை 4.30 மணிக்கு திருச்சிலுவைத் திருத்தலத்தில் மலையாளத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஆயருக்கு பங்கு மக்கள் வரவேற்பு, 7 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனை கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமையில் நடைபெறுகிறது. செப்.14 ஆம் தேதி மகிமைப் பெருவிழாவையொட்டி காலையில் பங்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலிகள், மலையாளத்தில் திருப்பலி, ஐந்து திருக்காய சபையினா் பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலையில் பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீா், கொடியிறக்கம், நன்றி திருப்பலி நடைபெறும்.

ஏற்பாடுகளை பங்குத்தந்தையா் லெரின்டிரோஸ், ஆரோக்கிய அமல்ராஜ் அருள் சகோதரிகள், ஆலய ஊா்நலக் கமிட்டியினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com