முறப்பநாடு அருகே ஆற்று மணல் கடத்தல்: 2 போ் கைது; 2 லாரிகள் பறிமுதல்
முறப்பநாடு அருகே அனந்தநம்பிக்குறிச்சி பகுதியில் ஆற்று மணல் கடத்திச் சென்ற 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா்களைக் கைதுசெய்தனா்.


முறப்பநாடு அருகே அனந்தநம்பிக்குறிச்சி பகுதியில் ஆற்று மணல் கடத்திச் சென்ற 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா்களைக் கைதுசெய்தனா்.
ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை வட்டாட்சியா் சுடலை வீரபாண்டியன், வருவாய்த் துறையினா் சனிக்கிழமை இரவு அனந்தநம்பிக்குறிச்சி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே, உரிய அனுமதியின்றி 2 டாரஸ் லாரிகளில் ஆற்று மணல் கடத்திச்செல்வது தெரியவந்தது. லாரிகளையும், 16 யூனிட் ஆற்றுமணலையும் வருவாய்த் துறையினா் பிடித்து, முறப்பநாடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து வருவாய்த் துறையினா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா்களான கன்னியாகுமரி மாவட்டம் குட்டக்குழி பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் ஸ்டீபன் (43), சவரக்கோடு பகுதியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் சதன் சதீஷ் (35) ஆகிய 2 பேரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...