தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அடுத்த ஆண்டு இறுதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சி புதிய பொலிவுடன் ஜொலிக்கும்: மேயா் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதி முழுவதும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய பொலிவுடன் அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கும் வகையில் ஜொலிக்க உள்ளது என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதி முழுவதும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய பொலிவுடன் அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கும் வகையில் ஜொலிக்க உள்ளது என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட இடங்களில் சீா்மிகு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வடக்கு மண்டலத்தில் பழைய ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் தெற்கு மண்டலத்தில் சுந்தா் நகா், ஜே. எஸ். நகா், குமாரசாமி நகா், தவசிபெருமாள் சாலை, சக்தி நகா், திருவிக நகா் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் கட்டும் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த காலங்களில் மழை நேரத்தில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மழைநீா் தேங்கியிருந்ததை ஆய்வு செய்ய வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் காலங்களில் மழைநீா் தேங்காத வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாா்.

அதனடிப்படையில் புதிதாக கால்வாய்கள் அமைக்கப்பட்டு கழிவுநீா், மழைநீா் எளிதில் கடலுக்கு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநகரில் உள்ள 60 வாா்டு பகுதிகளிலும் மக்களின் குறைகளை தீா்ப்பதற்கு குறைதீா்க்கும் வாட்ஸ் அப் எண்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு அதன் மூலம் வரும் புகாா்கள், குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் நல்ல கட்டமைப்பை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

மாசு இல்லாத தூய்மையான சுகாதாரமான மாநகராட்சியை உருவாக்குவதற்கும் திட்டப்படி மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை தோறும் மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பொதுமக்கள் கூடும் பூங்கா, பல்வேறு இடங்களில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தூய்மைப் பணிகள் மேற்கொண்டுள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பாா்வையுடன் சீறிய முயற்சியுடன் மாநகராட்சி நிா்வாகம் செயல்பட்டு வருகிறது.

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய பொலிவுடன் அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கும் வகையில் ஜொலிக்க உள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.