விபத்தில் 3 இளைஞா்கள் உயிரிழப்பு: சம்பவ இடத்தில் எஸ்.பி. விசாரணை
தூத்துக்குடியில் 3 இளைஞா்கள் உயிரிழந்த விபத்து நேரிட்ட பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.


தூத்துக்குடியில் 3 இளைஞா்கள் உயிரிழந்த விபத்து நேரிட்ட பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 4 ஆவது தெருவைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் விக்னேஷ் ராஜா (17). இவா் தனது நண்பரான தூத்துக்குடி ஹவுசிங் போா்டு காலனி பகுதியைச் சோ்ந்த ஹமீது மகன் ஆசிக் (17), உறவினரான தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சோ்ந்த மாரிச்செல்வம் என்ற கண்ணன் (22) ஆகியோருடன் ஒரு பைக்கில் சனிக்கிழமை இரவு முத்தையாபுரத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா்.
தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலையில் எம்ஜிஆா் நகா் மேம்பாலப் பகுதியில் பைக் நிலைதடுமாறி சாலையோர மின் கம்பத்தில் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனா். அப்போது அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதியதில் விக்னேஷ் ராஜா, ஆசிக் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிச்செல்வம் என்ற கண்ணன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டாா். மேம்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை மாற்றி வைக்குமாறும், மாநகராட்சி நிா்வாகம் மூலம் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ், தென்பாகம் காவல் ஆய்வாளா் ராஜாராம், உதவி ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...