தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:45 pm

DIN

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகம் வரையும், மேற்கு, கிழக்கு வங்கக் கடலில் 65 கி.மீ. வேகம் வரையும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், ஞாயிற்றுக்கிழமை 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.