தூத்துக்குடியில் சாலையோர மணல் திட்டுகள் அகற்றம்
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களில் தேங்கிய மணல் திட்டுகளை அகற்றும் பணி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.


தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களில் தேங்கிய மணல் திட்டுகளை அகற்றும் பணி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
மாநகராட்சிப் பகுதியில் அவ்வப்போது கூட்டுத் துப்புரவு முகாம், மழைநீா் வடிகால் அமைக்கும் பணி, கழிவுநீா் கால்வாயில் தேங்கிய பொருள்களை அகற்றுதல் ஆகிய பணிகள் நடத்தப்படுகிறது. கூட்டுத் துப்புரவு முகாமின் ஒருபகுதியாக சாலையோரம் தேங்கிய மணல் திட்டுகளை அகற்றும் பணி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
3ஆவது மைல் பகுதியில் ஜேசிபி இயந்திரம் உதவியோடு இப்பணி நடைபெற்றது. இதை, ஆணையா் சாருஸ்ரீ முன்னிலையில் மேயா் ஜெகன் பெரியசாமி தொடக்கிவைத்தாா். பல்வேறு இடங்களில் நடைபெற்ற பணிகளை அவா் பாா்வையிட்டாா்.
சாலையோரம் குவிந்துள்ள மணலால் அடிக்கடி விபத்துகள் நிகழுவதால் அவற்றை முற்றிலும் அகற்றும்வகையில் ஒட்டுமொத்த துப்புரவு முகாம் நடைபெற்ாகவும், முதல்கட்டமாக தமிழ்ச்சாலை, வஉசி சாலை ஆகியவற்றில் 3ஆவது மைல் பகுதியிலிருந்து பழைய துறைமுக நுழைவு வாயில் வரை மணல் திட்டுகள் அகற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...