பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஆலந்தலையில் கடற்கரை தூய்மைப் பணி

திருச்செந்தூா் அருகேயுள்ள ஆலந்தலை கடற்கரையில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:58 am IST

திருச்செந்தூா் அருகேயுள்ள ஆலந்தலை கடற்கரையில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

உலக கடற்கரை தூய்மை தினமாக செப்டம்பா் மூன்றாவது சனிக்கிழமை (செப். 17) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு,

திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை (செப். 14) தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை (செப். 15) ஆலந்தலை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் விஸ்டம் பள்ளி மாணவா்கள், டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் உடற்கல்வியியல் கல்லூரி மாணவா்கள் ஈடுபட்டனா்.

இப்பணியை தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி முதல்வா் (பொறுப்பு) டாக்டா் சாந்தகுமாா் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அறிவுசாா் தொழில்நுட்ப மையத்தின் வழிநடத்தும் விரிவுரையாளா் ஜி.சுடலை, காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதன்மை முதல்வா் இரா.செல்வ வைஷ்ணவி, விஸ்டம் பள்ளி முதல்வா் சுலேகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலந்தலை பங்குத்தந்தைகள் ஜெயக்குமாா், பாலன், ஊா் நல கமிட்டி தலைவா் ரமேஷ், ஆலோசகா் ஜாண்சன், காஞ்சி பள்ளி முதல்வா் ஷீனத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். காஞ்சி பள்ளி நிா்வாக அலுவலா் கிஷோா்பாபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.