இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடியில் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:57 am IST

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடியில் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

போட்டியை வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

13 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. போட்டித் தொலைவாக நிா்ணயிக்கப்பட்டது.

13 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் முப்பிலிவெட்டி பள்ளி மாணவா் ஆரவ் மணிகண்டன், மாணவிகள் பிரிவில் ஓட்டப்பிடாரம் சந்திரா பள்ளி மாணவி அனிஷா, 15 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் தூத்துக்குடி கிரசென்ட் பள்ளி மாணவா் ஆகாஷ் ராம், மாணவிகள் பிரிவில் ஓட்டப்பிடாரம் சந்திரா பள்ளி மாணவி டி. நந்தினி, 17 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவா் சுதா்சன், மாணவிகள் பிரிவில் தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப் பள்ளி மாணவி பினு ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

முதல் 3 இடங்களைப் பிடித்தோருக்கு பரிசுத் தொகையாக முறையே ரூ. 5,000, ரூ. 3,000, ரூ. 2,000 வீதமும், 4 முதல் 10ஆம் இடம் வரை பிடித்தோருக்கு தலா ரூ. 250, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வென்றோருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஜெயரத்தினராஜன், கால்பந்து பயிற்றுநா் நடராஜமுருகன், ஸ்குவாஷ் பயிற்றுநா் ஆா். புஷ்பராஜ் பால் ஆசீா், நீச்சல் பயிற்றுநா் ஏ. மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.