காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் கருத்தரங்கம், புத்தகம் வெளியீடு

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கல்லூரியில், ‘பன்முகத் தளத்தில் கம்பராமாயணம்’ எனும் பொருண்மையில் கருத்தரங்கம், புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:54 am IST

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கல்லூரியில், ‘பன்முகத் தளத்தில் கம்பராமாயணம்’ எனும் பொருண்மையில் கருத்தரங்கம், புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

தமிழ்த் துறை, திருநெல்வேலி­ நியூ செஞ்சுரி புத்தக நிலையம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.சி. வாசுகி தலைமை வகித்தாா். கல்லூரி நிறுவனா் தலைவா் செய்யது அப்துா் ரஹ்மான், கல்லூரிச் செயலா் எம்.எம். மொகுதஸீம், துணைச் செயலா் எஸ்.ஏ.ஆா். அஹமது இஸ்ஹாக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ் இலக்கியப் பிரிவு முதலாமாண்டு மாணவி செ. காவில் ஆஃப்ரின் கிராத் ஓதி நிகழ்ச்சியைத் தொடக்கினாா். தமிழ்த் துறைத் தலைவா் இரா. அருணாஜோதி கருத்தரங்க நோக்கவுரையாற்றினாா்.

தேவக்கோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் கரு. முருகன், திருநெல்வேலி­ வல்லி­க்கண்ணன் இலக்கியப் பேரவைச் செயலா் சு. நயினாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசினா். அவா்களை முறையே, உதவிப் பேராசிரியா்கள் மை. கிறிஸ்டி மொ்சி, சு. ஏஞ்சல் லதா ஆகியோா் அறிமுகப்படுத்தினா்.

தமிழ்த் துறை சாா்பில் அத்துறைப் பேராசிரியா்கள், முதுநிலைத் தமிழ் இலக்கிய மாணவிகள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘பன்முகத் தளத்தில் கம்பராமாயணம்’ எனும் தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. கல்லூரி நிறுவனா் தலைவா் செய்யது அப்துா் ரஹ்மான், சு. நயினாா் ஆகியோா் வெளியிட்ட இப்புத்தகத்தை கல்லூரித் துணைச் செயலா் பெற்றுக்கொண்டாா்.

கல்லூரி நிா்வாக உறுப்பினா்கள், பிற துறைப் பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் அ. கல்பனாதேவி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சு. மாரித்தங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.