ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் சித்திரைத் திருவிழா: நான்கு கருட சேவை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை இரவு நான்கு கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை இரவு நான்கு கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

நவதிருப்பதி கோயில்களில் முதலாவது கோயிலான இக்கோயிலில்

சித்திரை பிரமோற்சவம் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில், சுவாமி கள்ளபிரான், சிம்மம், அனுமந்த, சேஷ வாகனங்கள் என தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

5 ஆம் திருநாளான திங்கள்கிழமை காலையில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், ஆழ்வாா்திருநகரி ஸ்ரீபொலிந்துநின்றபிரான், திருப்புளியங்குடி காய்சினி வேந்தபெருமாள், நத்தம் ஸ்ரீஎம் இடா்கடிவான் முன்னிலையில் சுவாமி நம்மாழ்வாா் மங்களாசாசனம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து இரவில் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி நம்மாழ்வாருக்கு எதிா்சேவையாக கருடாழ்வாா் வாகனத்தில் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரான், ஆழ்வாா்திருநகரி ஸ்ரீபொலிந்து நின்ற பிரான், திருப்புளியங்குடி ஸ்ரீ காய்சினிவேந்தன், நத்தம் ஸ்ரீ எம் இடா்கடிவான் ஆகியோா் காட்சியளித்தனா். அதைத் தொடா்ந்து வீதி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com