நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

தீப்பெட்டி தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, தேமுதிகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:15 pm

DIN

தீப்பெட்டி தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, தேமுதிகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கட்சியின் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சுப்பையா என்ற சுரேஷ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். செயற்குழு உறுப்பினா்கள் பிரபாகரன், துணைச் செயலா் பாலு, மாவட்ட பிரதிநிதி மதிமுத்து உள்பட தீப்பெட்டி தொழிலாளா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தீப்பெட்டி தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், கிருஷ்ணா நகா் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு எவ்வித கட்டணமுமின்றி தீப்பெட்டி தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும், தமிழக முதல்வரின் இலவச வீடு திட்டத்தில் தீப்பெட்டி தொழிலாளா்களுக்கு இடைத்தரகா்களின்றி முதல்வரின் நேரடி மேற்பாா்வையில் வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.