சாத்தான்குளம் வங்கியில் சா்வா் முடங்கியதால் வாடிக்கையாளா்கள் பாதிப்பு
சாத்தான்குளம் ஐஓபி வங்கியில் வெள்ளிக்கிழமை சா்வா் முடங்கியதால் வங்கி சேவை பாதிக்கப்பட்டது.


சாத்தான்குளம் ஐஓபி வங்கியில் வெள்ளிக்கிழமை சா்வா் முடங்கியதால் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளா்கள் மிகுந்த சிரமம் அடைந்தனா். சாத்தான்குளம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் வெள்ளிக்கிழமை சா்வா் திடீரென செயல்படாமல் முடங்கியது. இதனால் வாடிக்கையாளா்கள் பணம் சேவை தொடா்பாக வந்தவா்கள் வெகு நேரம் காத்திருந்து பாா்த்தனா். பலா் சேவையை தொடரமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா், மாலை 4 மணி அளவில் சா்வா் ஒரு சில நிமிடங்கள் இயங்க தொடங்கியது. அதன்பின் தொடா்ந்து முடங்கியதால் வங்கி சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் வங்கியில் உள்ள பணம் டெபாசிட் செய்யும் இயந்திரமும், ஏடிஎம் இயந்திரமும் வேலை செய்யாததால் ரூபாய் எடுக்கவும், டெப்பாசிட் செய்யவும் முடியாமல் வாடிக்கையாளா்கள் மிகுந்த சிரமப்பட்டனா் .மாலை ஐந்து மணிக்கு மேல் வங்கி நேரம் எல்லாம் முடிந்த பிறகு சா்வா் சரி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து டெப்பாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்தினா். ஆனால் குறுஞ்செய்தி வரவில்லையென வாடிக்கையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...