வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறை சாா்பில் அரசு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:15 pm

DIN

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறை சாா்பில் அரசு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க பிரசார வாகனம் மூலமும் கலைக்குழுவினா் மூலமும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியா் பாலன் வரவேற்றாா். ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுந்தரராஜ் முன்னிலை வகித்தாா். இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள் அமுதா, அருணா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பேரணியில் கலைக்குழு மூலம் அரசு பள்ளியின் சிறப்புகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பேய்க்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள் இப்பிரசாரத்தில் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் பிராங்களின் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.