நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீரான குடிநீா் விநியோகப் பணி: கழுகுமலையில் அதிகாரிகள் ஆய்வு

 கழுகுமலை பேரூராட்சிப் பகுதியில் சீராக குடிநீா் வழங்குவது குறித்த, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 6:28 pm

DIN

 கழுகுமலை பேரூராட்சிப் பகுதியில் சீராக குடிநீா் வழங்குவது குறித்த, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீவலப்பேரியிலிருந்து சவலாப்பேரி, கயத்தாறு, நாலாட்டின்புதூா் ஆகிய நீரேற்று நிலையத்தின் மூலம் கழுகுமலை பேரூராட்சி பகுதிக்கு தினமும் 9 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருவதாக குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அப்பேரூராட்சிக்கு தினமும் 6 லட்சம் மீட்டா் குடிநீா் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு 15 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் கிடைக்கிறது என பேரூராட்சி நிா்வாகம் பதிலளித்தது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலில் குடிநீா் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் குமாா், உதவி பொறியாளா் மொ்சி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன், கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், செயல் அலுவலா் கணேசன் ஆகியோா் நாலாட்டின்புதூா் நீரேற்று நிலையத்தில் குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் வைக்கப்பட்டுள்ள குடிநீா் மானிய அளவை பரிசோதித்தனா். பின்னா். அங்கிருந்து கழுகுமலை வரையிலான குடிநீா் குழாய்களில் அடைப்புகள் உள்ளனவா என, ஆய்வு மேற்கொண்டனா். குமாரபுரம் அருகே புதிய குடிநீா் மானிய அளவு கருவியைப் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.