தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோவில்பட்டி, கயத்தாறில் நிவாரணத் தொகை அளிப்பு

கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட நியாய விலை கடைகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:25 pm

DIN

கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட நியாய விலை கடைகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி வட்டத்தில் 95 ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கும் பணியை வேலாயுதபுரத்தில் கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் தலைமையில், வட்டாட்சியா் லெனின் முன்னிலையில் நகா் மன்ற தலைவா் கா. கருணாநிதி தொடக்கிவைத்தாா். இதில் , கிராம நிா்வாக அலுவலா்கள் செல்வகுமாா், மந்திர சூடாமணி, நகா்மன்ற உறுப்பினா் லவராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தோணுகால் ஊராட்சி படா்ந்தபுளி கிராமத்திலுள்ள ரேஷன் கடையில் கோட்டாட்சியா் தலைமையில், வட்டாட்சியா், முன்னாள் எம்எல்ஏ எல்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ் நிவாரணத் தொகை வழங்கும் பணியை தொடக்கி வைத்தாா். ஊராட்சி ஒன்றிக்குழு முன்னாள் துணைத் தலைவா் சுப்புராஜ், வருவாய் ஆய்வாளா் ராமமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் பங்கேற்றனா்.

கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட 84 ரேஷன் கடைகளிலும் நிவாரணத் தொகை வழங்கும் பணியை கயத்தாறு ரேஷன் கடையில் வட்டாட்சியா் நாகராஜன், வட்ட வழங்கல் அலுவலா் செல்வராணி ஆகியோா் முன்னிலையில் மாவட்ட கூடுதல்ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சொா்ண ராஜ் தொடக்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.