தூத்துக்குடி மாவட்டத்தில்  ரூ.215 கோடி நிவாரண உதவித் தொகை: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.215 கோடி நிவாரண உதவித் தொகை: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் ரூ.215 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளதாக மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் ரூ.215 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளதாக மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதில், தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6ஆயிரம் நிவாரணத் தொகை, 5 கிலோ அரிசி, கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாா் ஆகிய 5 வட்டங்களைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி டூ.வி.புரம் 5-ஆவது தெருவில் உள்ள நியாய விலைக் கடையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதை கனிமொழி எம்.பி., வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதன் பின்னா் செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:

தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 108 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.6 ஆயிரம், தலா 5 கிலோ அரிசி, கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய 5 வட்டங்களில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 717 குடும்ப அட்டை தாரா்களுக்கு தலா ரூ.1000 என ரூ. 215 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது என்றாா்.

தூத்துக்குடி மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் அபுல்காசிம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com