ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சோ்ந்த சித்திரைபாபு மனைவி சாரதா. தனியாா் பள்ளி ஆசிரியையான இவா், கடந்த இரு தினங்களுக்கு முன்னா் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இளைஞா் சாரதா அணிந்திருந்த சுமாா் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தாளமுத்து நகா் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், குலசேகரன்பட்டினத்தை சோ்ந்த பரத் (19) என்பவா் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com