கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னா் காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, 7 மணிக்கு கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் மற்றும் சாலகார கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.

விழாவில், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், கோயில் நிா்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் ராஜகுரு, உறுப்பினா் திருப்பதிராஜா, நகா்மன்ற உறுப்பினா் விஜயகுமாா், மண்டகப்படிதாரா் கு.வேலாயுதம் செட்டியாா் குடும்பத்தினா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com