தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கோவில்பட்டியில் ஆக.12 இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.12 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 4:17 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.12 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் மக்களவை உறுப்பினா் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன், மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளனா்.

இதில் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் பெற்றவா்கள், பி.இ., டிப்ளமோ, நா்சிங், ஐடிஐ படித்தவா்கள் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது சுயவிவரம், கல்விச் சான்று, ஆதாா் அட்டை ஆகிய நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு வந்து பங்கேற்கலாம். மேலும் தனியாா்துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் வேலைநாடுநா்கள் மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் தங்களது விவரங்களை பதிவுசெய்ய வேண்டும். வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான கூடுதல் விபரங்கள்  என்ற டெலகிராம் சேனல் வழியாக தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.