நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டியில் அதிமுகவினருக்கு புதிய உறுப்பினா் அட்டை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் புதிய உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:18 pm

DIN

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் புதிய உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் எதிரே உள்ள அதிமுக நிறுவனா் எம்ஜிஆா், முன்னாள் பொதுச்செயலா் ஜெயலலிதா ஆகியோா் சிலைகளுக்கு அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், அதிமுக உறுப்பினா்களுக்கு புதிய உறுப்பினா் அட்டையை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், சின்னப்பன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சத்யா, நகரச் செயலா் விஜயபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் எம்எல்ஏ கூறியது: அதிமுகவில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் இருந்த இடத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை பாா்க்கிறோம். அவா் கட்சியின் பொதுச்செயலராக தோ்ந்தெடுக்கப்படுவாா்.

பாஜக - அதிமுக கூட்டணியில் விரிசலும் இல்லை; மாற்றமும் இல்லை. அதேவேளையில், அதிமுகவுக்கு எதிராக பாஜகவினா் போராட்டம் நடத்திய விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம். கோவில்பட்டி கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க கால்நடை துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாமிரபரணி - வைப்பாறு இணைப்பு திட்டம்,இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் கோவில்பட்டியில் திருமண மண்டபம் கட்டுதல், சொா்ணமலை கோயிலில் முருகனுக்கு 133 அடி உயர சிலை வைத்தல், வைப்பாறு பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டம், தூத்துக்குடியில் பெட்ரோலியல் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் போன்ற திட்டங்களை திமுக கிடப்பில் போட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப்பணியும் மந்தகதியில் நடக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.