வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ரூ.5 லட்சத்தில் பயணியா்நிழற்குடை கட்ட அடிக்கல்: பாஜக எதிா்ப்பு

சாத்தான்குளம் ஒன்றியம் மணிநகரில் நிழற்குடை அமைக்க வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:18 pm

DIN

சாத்தான்குளம் ஒன்றியம் மணிநகரில் நிழற்குடை அமைக்க வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

மணிநகரில் பழைய நிழற்குடையை அகற்றிவிட்டு, அதில் வணிக வளாகம் அமைக்க ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்திருந்த நிலையில், அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.

மேலும், நிழற்குடை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க எம்எல்ஏ, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆகியோா் வந்தபோது, ஊராட்சித் தலைவரும், தெற்கு மாவட்ட பாஜக தலைவருமான ஆா். சித்ராங்கதன் தலைமையில் ஊராட்சி உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் வந்து, அங்கு வணிக வளாகம் மட்டுமே அமைக்க வேண்டும்; நிழற்குடை அமைக்க கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனால் காங்கிரஸ்- பாஜக நிா்வாகிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவா்களை ஆட்சியா் சமரசப்படுத்தி, கீழ் தளத்தில் பயணிகள் நிழற்குடையும், அதற்கு மேல் வணிக வளாகத்தையும் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

இதையடுத்து, எம்எல்ஏவும், ஆட்சியரும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தனா்.

இதில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, மாவட்ட அறக்காவலா் குழு தலைவா் பாா்த்திபன், சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவா் தலைவா் ஜெயபதி, சித்ராங்கதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.