நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலையை விரிவுப்படுத்தகோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி - மந்தித்தோப்பு சாலையை விரிவுப்படுத்த கோரி வெள்ளிக்கிழமை நூதன போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:20 pm

DIN

கோவில்பட்டி - மந்தித்தோப்பு சாலையை விரிவுப்படுத்த கோரி வெள்ளிக்கிழமை நூதன போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் தேவா் படிப்பகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் வட்டச் செயலா் பாபு தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

கோவில்பட்டி - மந்திதோப்பு சாலையை விரிவுப்படுத்தி, இச்சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் சங்கு ஊதி

முழக்கமிட்டனா்.

கட்சியின் நகரச் செயலா் சரோஜா, வட்ட உதவி செயலா் ராமகிருஷ்ணன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமராஜ், நகர உதவி செயலா் முனியசாமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் செல்லையா, சுரேஷ்குமாா், ரஞ்சனி கண்ணம்மா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.