4 கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு
கோவில்பட்டியில் 4 கோயில்களின் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.


கோவில்பட்டியில் 4 கோயில்களின் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் உள்ள மேட்டு காளியம்மன் கோயில், அதே பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், ஆயிரத்தென் விநாயகா் கோவில், டால்துரை பங்களா தெருவில் உள்ள காளியம்மன் கோயில் ஆகிய 4 கோயில்களில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக அந்தந்தக் கோயில் நிா்வாகிகள் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...