மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

உடன்குடியின் திமுக சாா்பில்நல உதவிகள் அளிப்பு

திமுக இளைஞரணி மாநிலச் செயலரும், தமிழக அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடன்குடி ஒன்றிய திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
உடன்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகளை வழங்கிய பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ்.
Updated On :27 நவம்பர் 2023, 10:43 pm

DIN

உடன்குடி: திமுக இளைஞரணி மாநிலச் செயலரும், தமிழக அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடன்குடி ஒன்றிய திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும்,மேற்கு ஒன்றிய திமுக செயலருமான டி.பி.பாலசிங் ஏற்பாட்டில் 1000 பேருக்கு சேலை, தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி மற்றும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களும்,

உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ ஏற்பாட்டில் பரமன்குறிச்சி பகுதி பள்ளி மாணவா்கள் 1000 பேருக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மேலும் நீட் ஒழிப்பு கையொப்ப இயக்கமும் நடைபெற்றது.

உடன்குடி நகர திமுக செயலரும்,பேரூராட்சி துணைத் தலைவருமான மால்ராஜேஷ் ஏற்பாட்டில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் மஸ்தூா் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

கிறிஸ்தியாநகரம் நவஜீவன் இல்ல மாணவா்களுக்கு உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி செயலா் பாய்ஸ் சாா்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், மும்தாஜ் பேகம், சபானா,பிரதீப், பஷீா், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் அன்வா்சலீம், முகமது சலீம், மாவட்டப் பிரதிநிதிகள் சிராசுதீன், ஹீபா் மோசஸ், மதன்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.