மாப்பிள்ளையூரணியில் திமுகவினா் வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு

மாப்பிள்ளையூரணியில் திமுகவினா் வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழிக்கு, கிழக்கு ஒன்றிய திமுக செயலரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவருமான சரவணக்குமாா் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜோதிபாஸ் நகரில் வீடு வீடாகச் சென்று, திமுகவின் சாதனைகள், செயல்திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.

இதில் திமுக தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய துணைச் செயலா்கள் கணேசன், ராமசந்திரன், மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ஆரோக்கிய மேரி உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com