தமிழக தலைமைச் செயலர், உளவுத்துறை டிஜிபி மாற்றம்!என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
/

நாசரேத்தில் குரங்குகள் அட்டகாசம்

நாசரேத்தில் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

நாசரேத் பேரூராட்சி என்.றி.என். தெருவில் நடமாடும் குரங்குகள்.

Updated On :15 ஏப்ரல் 2024, 8:39 pm

சாத்தான்குளம்: நாசரேத்தில் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட 3ஆவது வாா்டு என்.றி.என் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த சில வாரங்களாக குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும் இந்தப் பகுதிக்கு வரும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள உணவு பொருள்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருள்களை தூக்கி செல்கின்றன. மேலும், அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை தொந்தரவு செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா், மாணவிகளையும் துரத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் மாணவா்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் கூண்டு அமைத்து இந்தப் பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து அடா்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.