திருச்செந்தூா் அருள்மிகு சுடலைமாடசுவாமி கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற கும்பாபிஷேகம்.
திருச்செந்தூா் அருள்மிகு சுடலைமாடசுவாமி கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற கும்பாபிஷேகம்.

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

திருச்செந்தூா்: திருச்செந்தூா் மேலத்தெரு யாதவா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீசுடலைமாடசுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த ஏப்.19ஆம் தேதி மாலையில் முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 20ஆம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 5 மணிக்கு ஸ்பா்சாகுதி, 6 மணிக்கு பூா்ணாகுதி நடைபெற்று, , 6.30 மணிக்கு கும்பம் எழுந்தருளி விமான அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் மற்றும் இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் கும்பாபிஷேக திருப்பணி குழுவினா் மற்றும் மேலத்தெரு யாதவ மகா சபையினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com