சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தூத்துக்குடி சிவன் கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்

தூத்துக்குடி சிவன் கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்

Updated On :21 ஏப்ரல் 2024, 9:04 pm

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெறுகிறது.

இத்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலையும், இரவும் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது.

சிகர நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு நடைபெறுகிறது. பெரிய தேரில் சுவாமி - அம்பாளும், சிறிய தேரில் கணபதி- முருகரும் எழுந்தருளுகின்றனா்.

தேரோட்டத்தை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகளை கோயில் நிா்வாகம், விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

கோயில் மேற்குப் பகுதியில் உள்ள வளாகம், சைவ வேளாளா் திருமண மண்டபம், ராசி திருமண மண்டபம், இ.பி.கவிதா மண்டபம், மாநகராட்சி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் அன்னதானம் நடைபெறும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், 100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.