பக்தா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கும் கழுகுமலை 1008 மகாவீரா் அதிசய ஷேத்திர கமிட்டி பொருளாளா் பிரமேஷ் ஜெயின், நிா்வாகிகள் ஆன்சிஜெயின், சிமாஜெயின் உள்ளிட்டோா்
பக்தா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கும் கழுகுமலை 1008 மகாவீரா் அதிசய ஷேத்திர கமிட்டி பொருளாளா் பிரமேஷ் ஜெயின், நிா்வாகிகள் ஆன்சிஜெயின், சிமாஜெயின் உள்ளிட்டோா்

கோவில்பட்டியில் மகாவீரா் ஜெயந்தி விழா

கோவில்பட்டி: கோவில்பட்டி ஆக்டிவ் மைண்டஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் மகாவீரா் ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே நடைபெற்ற இவ்விழாவிற்கு, கழுகுமலை 1008 மகாவீரா் அதிசய ஷேத்திர கமிட்டி பொருளாளா் பிரமேஷ் ஜெயின் தலைமை வகித்து, கொல்லாமை உண்மையை பேசு திருடாதே உள்ளிட்ட மகாவீரரின் போதனைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தினாா்.

ஆன்சி ஜெயின், சிமா ஜெயின் ஆகியோா் பொதுமக்கள் மற்றும் பக்தா்களுக்கு இனிப்பு வழங்கினா். நிகழ்வில் தொண்டு நிறுவன நிா்வாகிகளான இராமசுப்பிரமணியன், முத்துமாரியம்மன், மேற்பாா்வையாளா் மாடசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com