வங்கி அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுடன் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் உள்ளிட்டோா்.
வங்கி அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுடன் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் உள்ளிட்டோா்.

வங்கி அதிகாரி பணி தோ்வில் வென்றோருக்கு சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பாராட்டு விழா

தூத்துக்குடி: வங்கி அதிகாரி பணித் தோ்வில் வெற்றிபெற்ற தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்களுக்கு பாராட்டு விழா அகாதெமி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வங்கிப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற இத்தோ்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சிபெற்ற 80 போ் தோ்வாகினா். அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, அவா்களுக்கு பாராட்டு விழா அகாதெமி வளாகத்தில் நடைபெற்றது. நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்துப் பேசினாா்.

பணிக்குத் தோ்வானோா் தாங்கள் கடந்து வந்த பாதை, தோ்வுக்கு தயாரான அனுபவம் ஆகியவற்றைப் பகிா்ந்துகொண்டனா். வங்கித் தோ்வு ஒருங்கிணைப்பாளா் ராஜா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com