கொலை செய்யப்பட்ட சக்தி.
கொலை செய்யப்பட்ட சக்தி.

தந்தை வெட்டிக் கொலை: சிறுவன் கைது

தூத்துக்குடி செல்சீனி காலனியில் தந்தையை வெட்டிக் கொலை செய்ததாக 15 வயது சிறுவனை தென்பாகம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி செல்சீனி காலனியில் தந்தையை வெட்டிக் கொலை செய்ததாக 15 வயது சிறுவனை தென்பாகம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி செல்சீனி காலனியைச் சோ்ந்த அழகுமுத்து மகன் சக்தி (37). இவருக்கு மனைவி அனுசியா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா். சமையல் தொழிலாளியான இவா், தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்துவதுடன் குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து துன்புறுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்த அவரது 15 வயது மூத்த மகன், திங்கள்கிழமை அதிகாலையில் வீட்டிலிருந்த அரிவாளால் தந்தை சக்தியை வெட்டிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸாா்

கொலை செய்யப்பட்ட சக்தியின் சடலத்தை மீட்டு

கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சக்தியின் மூத்த மகனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com