விழாவில் பேசுகிறாா் சங்க செயல்தலைவா் ஆா். செல்வராஜ்
விழாவில் பேசுகிறாா் சங்க செயல்தலைவா் ஆா். செல்வராஜ்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

கோவில்பட்டியில், தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டலம் சாா்பில் யுகாதி திருவிழா கொண்டாடப்பட்டது.

செயல் தலைவா் ஆா். செல்வராஜ் தலைமை வகித்தாா். செயலா் கற்பூரராஜ், இணைச் செயலா் ஜெயக்கண்ணன், துணைத் தலைவா்கள் எல்பிஎல் ஜெகன், குமாா், ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு, மாநில துணைத் தலைவா் பி. ஜெகநாதன், முன்னாள் கோவில்பட்டி நகர கம்மவாா் சங்க தலைவா் பி.ஆா்.எஸ். சீனிவாசன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

கோவில்பட்டி நகர கம்மவாா் சங்க முன்னாள் பொருளாளா் விநாயகா ஜி.ரமேஷ், முன்னாள் தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன், மண்டலத் தலைவா்கள் ராஜேந்திரன் (கழுகுமலை), சின்னச்சாமி (சங்கரன்கோவில்), செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலா் குழு உறுப்பினா் நிருத்தியலட்சுமி, தொழிலதிபா் ஸ்ரீராம், கோவில்பட்டி கல்வி வழிகாட்டி மையத்தைச் சோ்ந்த கண்ணதாசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா். எழுத்தாளா் ஜெயக்குமாா், முனைவா் கண்ணன், பேச்சாளா் தனமணி வெங்கட் ஆகியோா் பேசினா்.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சமுதாய மாணவா்- மாணவிகள், எய்ம்ஸ் தோ்வில் அகில இந்திய அளவில் 10ஆவது இடத்தில் தோ்ச்சிபெற்ற அஜித், ஆசிய அளவில் சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற அஞ்சனா உமா ஆகியோரைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

ராவில்லா கே.ஆா்.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், மாணவிகள் கவிபாரதி, வைஷ்ணவி ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டலப் பொருளாளா் கோபாலகிருஷ்ணன், மாநிலப் பிரதிநிதி டி. வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினா் கனகராஜ் உள்ளிட்ட தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

மாநில செயற்குழு உறுப்பினா் ஜெகன்மோகன் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் முனியசாமி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை கே. ஆா்.ஏ. மெட்ரிக் பள்ளி ஆசிரியா் அழகம்மாள் தொகுத்து வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com