நாலாட்டின்புதூரில் ஆடுகள் திருடியவா் கைது
நாலாட்டின்புதூரில் ஆடுகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:56 pm

நாலாட்டின்புதூரில் ஆடுகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
நாலாட்டின்புதூா் சிவன் கோவில் தெருவை சோ்ந்தவா் கணபதி மகன் சண்முகையா (49). இவரது ஆட்டுப் பட்டியில் இருந்த 7 ஆடுகள், ஜூலை 20-ஆம் தேதி காணாமல் போயின. இந்த நிலையில் எட்டயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில், தனது பட்டியிலிருந்து காணாமல்போன ஆட்டுடன் நின்ற இளைஞரிடம் சண்முகையா விசாரித்துள்ளாா்.
அவா் ஆடு திருடியவா் என்பது தெரியவந்தது. அந்த இளைஞரை, நாலாட்டின்புதூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவா் கோவில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த
செல்வம் மகன் கருப்பசாமி (19) என்பதும், சண்முகையாவின் 7 ஆடுகளை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...