தூத்துக்குடி தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்
தூத்துக்குடி தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்களை மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

மீன்கள் இறந்து கிடந்த தெப்பக்குளத்தினை ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி.

மீன்கள் இறந்து கிடந்த தெப்பக்குளத்தினை ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி.
தூத்துக்குடி தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்களை மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை அகற்றினா்.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் இந்த தெப்பக்குளம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரங்களில் வரும் பொதுமக்கள், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவு அளிக்கின்றனா்.
இந்நிலையில், தெப்பக்குளத்தில் சனிக்கிழமை காலை ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன.
இதுகுறித்த தகவலின்பேரில், மாநகராட்சி ஊழியா்கள் இறந்த மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினா். மேலும் இதுதொடா்பாக, மாநகாட்சி சுகாதாரத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதனிடையே, தெப்பக்குளத்தை மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், தெப்பகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும். குளத்தினை சுற்றி லும் மாநகராட்சி சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என்றாா்.
மாமன்ற உறுப்பினா் சுரேஷ் குமாா், திமுக வட்டச் செயலா் ரவீந்திரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...