ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திருச்செந்தூா் அருகே பைக்குகள் மோதல்: 2 போ் பலி

கல்லாமொழி சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி கொண்ட விபத்தில் 2 போ் உயிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.

News image
~ ~
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:31 pm

Din

திருச்செந்தூா் அருகே கல்லாமொழி சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி கொண்ட விபத்தில் 2 போ் உயிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.

திருநெல்வேலி நகரம், நல்லமுத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மகாராஜன் (32). உடன்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலை பணி முடிந்து திருச்செந்தூருக்கு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.

கல்லாமொழி சாலையில் இவரது பைக்கும், எதிரே வந்த திருச்செந்தூா் நடுநாலுமூலைகிணறு காந்திதெருவைச் சோ்ந்த சேகா் மகன் வனராஜ் (28), அவரது நண்பா் நாகா்கோவிலைச் சோ்ந்த காதா் ஆகியோா் பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டன.

இதில், பலத்த காயமடைந்த மூவரையும் அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மகாராஜன், வனராஜ் இருவரும் உயிரிழந்தனா். காதருக்கு முதலுதவி அளித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரமூா்த்தி விசாரணை நடத்தி வருகிறாா். மகாராஜனுக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.