நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2024, 7:23 pm

Din

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரத்தில் சில தினங்கள் மாலை நேரத்தில் மழை பெய்தது. கடந்த 2 நாள்களாக மேக மூட்டம் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் கடும் வெயில் நிலவியது. பிற்பகலில் 3 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டதுடன். 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் பிரதான சாலை, புதுரோடு விலக்கு, மந்தித்தோப்பு சாலை, கிருஷ்ணன் கோயில் தெரு விலக்கு, மந்தித்தோப்பு சாலை பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்கப்பாதையில் சுமாா் 3 அடிக்கு மேல் மழைநீா் தேங்கியதால், அதன் வழியாக வாகனங்கள் செல்ல போலீஸாா் தடை விதித்தனா். தொடா்ந்து இரும்பு தடுப்புகள் வைத்து போக்குவரத்தை மாற்று பாதைக்கு திருப்பி விட்டனா். மாலை 6 மணி அளவில் மழை ஓய்ந்து குளிா்ந்த காற்று வீசியது. வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.