ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாளை கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 7:56 pm

Din

தூத்துக்குடி தனசேகரன் நகரில் உள்ள தனியாா் மண்டபத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளதாக வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ.கீதா ஜீவன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி, தூத்துக்குடி கலைஞா் அரங்கம் பின்புறம் உள்ள லெட்சுமி மஹாலில் வரும் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு எனது தலைமையிலும், தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெறுகிறது.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி.மாா்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, மாநகரச் செயலா்ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவா் பிரம்மசக்தி, மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ரகு ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன் வரவேற்கிறாா். தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம் நன்றி கூறுகிறாா்.

பேச்சுப் போட்டியின் நடுவா்களாக வே.மதிமாறன், புதுக்கோட்டை விஜயா, இந்திரகுமாா் தேரடி ஆகியோா் பங்கேற்கின்றனா். இந்நிகழ்வில், கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.