தூத்துக்குடி
தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தூத்துக்குடி துறைமுகத்தில் புதன்கிழமை (ஆக. 28) நடைபெறவிருந்த துறைமுக ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா்.
தூத்துக்குடி துறைமுகத்தில் புதன்கிழமை (ஆக. 28) நடைபெறவிருந்த துறைமுக ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஐஎன்டியூசி அகில இந்திய அமைப்புச் செயலா் கதிா்வேல், சிஐடியூ மாநிலச் செயலா் ரசல் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுதில்லியில் மத்திய கப்பல் துறை அமைச்சகம் தொழிற்சங்கத்துடன் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுக தீா்வு ஏற்பட்டது.
அதனால், புதன்கிழமை (ஆக. 28) நடைபெறவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி துறைமுகத்தில் புதன்கிழமை வழக்கம்போல வேலைகள் நடைபெறும் என்றனா் அவா்கள்.