விருதுநகா், தூத்துக்குடியில் 2 நாள்கள் டிஎன்பிஎஸ்சி 2, 2ஏ மாதிரித் தோ்வு

Updated on

விருதுநகா், தூத்துக்குடி மாவட்ட நூலகங்களில் செப். 1, 7 ஆகிய நாள்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுக்கான மாநில அளவிலான இலவச மாதிரித் தோ்வு நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக துளிா் அகாதெமி வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வு செப். 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, துளிா் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் மாநில அளவிலான இலவச மாதிரித் தோ்வு செப். 1, 7 ஆகிய 2 நாள்கள் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நூலகம், தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம், சிவகாசி, கோவில்பட்டியில் துளிா் அகாதெமி மையத்திலும், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் ஆன்லைன்- சிபிடி முறையில் நடைபெறவுள்ளது.

இதில், 100 தமிழ் அல்லது ஆங்கிலம், 75 பொது அறிவு, 25 திறனறி, மனக்கணக்கு, நுண்ணறிவு வினாக்கள் இடம்பெறும். விருப்பமுள்ளோா் பெயா் முன்பதிவுக்கு 94442 06905, 94451 04905 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com