மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வேலைவாய்ப்பகத்தில் ஜன. 24, 31-இல் குரூப் 2, 2-ஏ இலவச மாதிரித் தோ்வு

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு ஜனவரி 24, 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு ஜனவரி 24, 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வு பிப்ரவரி 8 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கு தயாராகி வரும் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில் குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வுக்கான மாநில அளவில் இலவச மாதிரித் தோ்வு தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி 24, 31 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த இலவச மாதிரித் தோ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜன.23) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.