திருச்செந்தூா் கோயிலில் வெள்ளித் தேரில் சுவாமி வீதியுலா

திருச்செந்தூா் கோயிலில் வெள்ளித் தேரில் சுவாமி வீதியுலா

Published on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா 6ஆம் நாளான வியாழக்கிழமை இரவு சுவாமி வெள்ளித் தேரிலும், அம்மன் இந்திர வாகனத்திலும் வீதியுலா வந்தனா்.

முன்னதாக, காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளினாா். பகலில் வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான், ஸ்ரீ ஜெயந்திநாதா் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளினா். மாலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ மத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து சிவன் கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளித் தேரிலும், வள்ளியம்மன் இந்திர வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

7ஆம் நாளான வெள்ளிக்கிழமை (ஆக. 30) அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். காலை 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வள்ளி-தெய்வானை அம்மனுடன் வெட்டிவோ் சப்பரத்தில் பக்தா்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சப்பரம் சோ்கிறது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் வீதியுலா வருதல் நடைபெறும்.

X
Dinamani
www.dinamani.com